மருதம் - ஸ்ரீவி
காட்டு
விலங்காய்
வாழ்ந்திருந்த
மனிதன்
பரிணாம
வளர்ச்சியில்
நாட்டு
மனிதனாய் மாறிட்ட
அருபெரும்
நிகழ்வின்
அடித்தளம்
இட்டது
பச்சைபசேல்
வயல்களே..
வயல்வெளிகள்
உழவின்
பலனால்
தந்திட்ட
தானிய மணிகளே..
உழவின்
பெருமையை
மனிதகுலம்
அறிந்திட்ட
நாள்
துவங்கித்தான்,
பரிணாம
வளர்ச்சியில்
சமூக
அமைப்புத்
தோன்றியதென
கோட்பாடு
சொல்கிறதே.
நாடோடிகளாய்
சுற்றித்
திரிந்த
மனிதன்
நதிக்
கரையோரங்களில்
சமவெளிகளில்
பெரும்
குழுக்களாய்
நிரந்தரமாய்
தங்கித்
துவங்கியதும்
அப்போதுதானே.
மனித
நாகரிக
வளர்ச்சியும்
அன்று
துவங்கியதுதானே!
அன்றுமுதல்
இன்றுவரை
மனிதனின்
பசியாற்றி
அவனது
வளர்ச்சிக்கு
அடித்தளமிட்டது
வயலன்னைதானே!
பச்சை
மரகதப் போர்வையால்
தன்
அழகு மேனியைப்
போர்த்தி,
தன்மீது
வளர்ந்திருக்கும்
பயிர்களை
உரசி வீசிடும்
காற்றில்
அசைந்து
அசைந்தாடும்
அழகினைப்
பார்த்து
அகமகிழும் நில அன்னையை முத்தமிடவே தானியங்களைத்
தாங்கி
நிற்கும்
பயிரினங்கள்
தலை வணங்கி
தலை
சாய்த்து
நிற்கின்றனவோ!
வயல்வெளி
நிலப்பரப்பு
இல்லையேல்
மனித
பரிணாமம் இல்லை
நாகரிக
வளர்ச்சி இல்லை
இதை
உணராத மனிதகுவம்
நன்றாய்
வாழ்வதுமில்லை.
வயல்களைக்
கூறுபோட்டு
மனைகளாக்கி
காசு பார்ப்போர்
தம்
வயிற்றைத் தாமே
கிழித்து
பசியாற நினைப்பவரே!
இயற்கையன்னையின்
அழகிய
கோலங்களில்
மனித
வாழ்வின்
ஓர்
அங்கமாய்
மாறி
நிற்கும்
மருதத்
திணையை
போற்றி
மகிழ்வோமே!
அதன்
பேரெழில் மிகு
கோலத்தை
பாதுகாத்து
மேலும்
உயர்வோமே!
வயலும்
வயல் சார்ந்த இடமும்
~இது
அன்று
வீட்டுமனைகளும்
அவை சார்ந்த இடமும்
இது இன்று
-------------------------------------------
மருதம் - முகம்மது சுலைமான்
நெல் நட்டேன்
வாழை நட்டேன்
கரும்பு நட்டேன்
விலை போகவில்லை
கல் நட்டேன்
உடனே விலை போய்விட்டது
----------------------------------------
மருதம் - மோகன்
உழவர் , உழத்தியர்
நாற்று நடுகையில்
குலவைப்பாட்டு பின்புலமாக, செங்கால்நாரைகள்
பாய்ந்து வந்து மீன்களைக்கொத்த,
ஒரு திரைப்படக்காட்சியே
காசு இன்றிக்காணக்
கிடைக்குதே!
காளைகளை ஓட்டம்
விட்டுப்பிடித்துக் கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு போட்டி இட்டு முண்டாசு கட்டி மீசையை முறுக்கும்
இளவட்டக் கூட்டங்கள் 'மாப்பிள்ளைக்கல்லையும் தூக்கி தோள்வலி காட்டுவர்.
உழதுண்டு தொண்டு செய்யும் இந்நில மக்களின்றி
பிழைப்புக்கு நகரம் தேடிஓடும் மாக்களுக்கு
கும்பி நிறைவது எங்ஙனம்?
ஊடல் கொள்ளும்
கணவனும் மனைவியையும் ஒன்று சேர்ப்பது வயற்காடுகளும்
களத்து மேடுகளும்தான்.
அன்று மருதமாக இருந்த நிலங்கள்
இன்று கரு மாறி உரு மாறி '"பூர்வா" 'நுழை வாயில் சமூகம்
'( gated community) ஆக மாறி மழை வெள்ளங்களை ஈர்க்கின்றன! திணை மாற்றம்!
தாமரை மலரும் நிலமாம் இது!
ஊடலால் அவனும்அவளும் பிணக்கு கொண்டாலும்
வயற்காடுகள்உறவை
ஒன்று
மோகன்
No comments:
Post a Comment