மருதம் - வித்யா
பச்சைப்
பட்டாடை உடுத்திய நிலமகள்!
அவள்
ஆடை நெய்யும்
விவசாயிகள்!
அவள்
ஆடையின்
புட்டாக்களாய்
நீர்
நிறைந்த
கிணறுகள்!
பார்டர்களாய்(
ஓரங்கள்)
வரப்புகள்!
மேலும்
அலங்கரிக்கும்
கண்கவர்
மலர்கள்!
அவள்
ஆடையின்
சாயம்
களைத்த
தொழிற்சாலைகளும்
அடுக்குமாடிகளும்!
அவள்
ஆடை கிழித்து
சிறு
குழந்தைகளைப்
பலி
வாங்கிடும்
ஆழ்த்துளைக் கிணறுகள்!!
மருத
மகளின்
ஆடையைத்
தையலிட்டுப்
புதுப்பிக்க யாரேனும் வல்லவர்
உண்டோ?
மருதம் - சங்கீதா
பச்சைப் பட்டாடை உடுத்திய நிலமகள்!
அவள் ஆடை நெய்யும்
விவசாயிகள்!
அவள் ஆடையின்
புட்டாக்களாய்
நீர் நிறைந்த
கிணறுகள்!
பார்டர்களாய்( ஓரங்கள்)
வரப்புகள்!
மேலும் அலங்கரிக்கும்
கண்கவர் மலர்கள்!
அவள் ஆடையின்
சாயம் களைத்த
தொழிற்சாலைகளும்
அடுக்குமாடிகளும்!
அவள் ஆடை கிழித்து
சிறு குழந்தைகளைப்
பலி வாங்கிடும்
ஆழ்த்துளைக் கிணறுகள்!!
மருத மகளின்
ஆடையைத்
தையலிட்டுப் புதுப்பிக்க யாரேனும் வல்லவர்
உண்டோ?
--------------------------
மருதம் - மலர்
பச்சை புடவையிலே
நிலமகள் மின்னயிலே
தெம்மாங்கு பாட்டுக்கு
நெற்கதிரும் ஆடுதடி
சலசலக்கும் ஓடையிலே
அயிரமீன் குதிக்கையிலே
ஒத்தைகாலில் கொக்கு ஒண்ணு அதைப்பிடிக்க நிக்குதடி
ஏறு பூட்டி உழுகையிலே
காளை மாடு உசும்பையிலே
அடங்கா திமில் கண்டு
துள்ளாத மனம் துள்ளுதடி
உலகமே இன்று உண்ணயிலே
பசியால் உழவன் சாகயிலே
மருதமன்னர் தம் நிலை கண்டு
பாவி மனம் நோகுதடி...
No comments:
Post a Comment