புகழ் - வெங்கட்ராமன்
ஈதற் பத்து
புகழென்னும் வண்ணக்கோலம்
பூமாலை சீர்போன்றும்
புகழ் பெற்றோர் அஞ்ஞான்று
புகழுரைப்பச் சீர்குலையும்
புகழினிது புகழினிது
பொன் பொருளைவிடப் பேரினிது
பெற்றினும் மிகப்பெரிது
பெற்றீதல் என்பேன் யான்.
தன் செயலில் நன்குயர்ந்து
தலைமையின் பால் உவந்து
பெருந்தகை ஆற்றல் அணிந்து
நற்பணி செய்க. நூல்கூறும்.
கொடுங்கோல் தனைத் துறந்து
கொடுப்பதன் மகிமை பரப்பி
அருள்மிகு
நெறியில் காத்து
அணைந்திருக்கும் தலைவன் மேன்மை.
உழைப்பின் சுவையை உணர்ந்து
உண்மையின் வழியில் பாய்ந்து
நலஞ்செய் ஆர்வம்
கொண்டு,
நாணத்தைப் போற்றி வாழ்வோம்.
வெற்றி தனை வென்று நின்று,
சுற்றம் புகழ் பாட நின்று,
புகழ் நிலை நின்று என்றும்,
புகழ்மிக்க முடி ஆவோம்.
அன்புடனே இயங்கிச் செல்ல,
அதனால் வரும் புகழ் நிலைத்து,
அதிசயம் என்றும் விளங்கிடும்,
ஆசியப்பா சிந்தனையில்
ஆசிரி
அப்பா சிந்தனையில்
ஈதல் துணையாக வாழ்வோம்
இசையுடன் நன்மை செய்வோம்
தீதின்றிச் செயல்கள் புரிவோம்
தினந்தினம் நல்வழி செல்வோம்
கொடையளித்தல் உயர்வு தரும்
கொடுப்பார் பெயர் நிலைத்திருக்கும்
ஈதல் இசைபட வாழ்வதே சிறப்பு
ஈவது வாழ்வின் இலக்கணம் என்ப
உயிர்க்கு ஊதியம் வேறு இல்லை
உதவி செய்தல் வாழ்வின் நோக்கம்
பிறருக்கு உதவி செய்யும் உள்ளம்
பொன்னைவிடச் சிறந்தது என்ப
தாண்மைப் பத்து
புகழென்ப போகுமுகில் போலென்ப
பூப்படையா நாற்றமிகு மலரென்ப
புகழ் சீற்றம் பூணாது - மனதைப்
பேணுவதே வாழ்வென்ப நல்வாழ்வென்ப
புகழ் வரும் போது நம்மில்,
போகாது தாண்மை நிற்க.
புகழால் மனம் மயங்கி
பெருந்துயர் தனை விடுக
தாண்மை என்பது துணிந்திடல்
தடை நேர்ந்தும் தயங்காமல்
புகழ் வருமின் மேலும்
பொருந்திட வேண்டும் உறுதியில்.
புகழோடு தன்னை மறந்து போகாது நெஞ்சம் நிலைத்திடுவோம் நாளும் துணிவுடன் வாழ்ந்து நல்லோர் வழியில் உழைத்திடுவோம்
வாழ்வில் தோன்றும் புகழ்ச்சியை
வணங்குவோம் பணிமின் கடந்து
தாண்மை நெஞ்சில் விளங்கிட
நம்மைத் தாங்கும் தாரகமே!
புகழ் மனம் கொண்டு வீழாமல்,
புன்னகை செய்வது துறக்காமல்,
உறுதி நெஞ்சில் வளர்ந்திட,
உணர்வு தழைக்க வேண்டும்.
நிலைத்துப் புகழ் ஏந்தும் போது,
நிலை குலையாமல் நிற்போம்
அச்சம் நெஞ்சிலே தோன்றாமல்,
அறிவுடன் செயலாய் விளங்கிடும்
துணிந்திடல் தாண்மை ஆகுமே,
தோற்றம் இடையிலே வீழாமல்,
புகழ் வரும் போது நெஞ்சத்தில்,
பொறுப்பு கூடித் திகழவே.
புகழ்தான் உயர்வின் அடிப்படையே,
அது மனத்தை மயக்கும் வேளை,
உறுதியில் நின்று காக்கவே,
உழைப்பின் நெறியில் வாழ்வோமே.
புகழும் புகழ்க்கும் தூணாக,
தாண்மை நெஞ்சில் தழைக்கட்டும்.
பெருமை வந்து சேர்ந்த போதும்,
தாண்மை உயர்ந்தே வாழட்டும்.
தாண்மை உயர்ந்த தூணாக,
தலைநிமிர்ந்து வாழ்வோம் நாம்!
வழி ஐந்து
புகழென்றும் விருந்தோன் போல
வருமிது அவ்வப்போது நாளில்
புகழ் வந்து கொண்டால் மட்டும்,
புரிவது வாழ்க்கையின் வடிவம்
வாழ்வின் மைல்கற்கள் உழைப்பில்
வினை கடந்து நெறியிலே
விளைந்திடும் வெற்றி கைகூட
வினையொன்றே வாழ்வு தரும்
உழைப்பில் வரும் சுகம் தான்,
உலகில் புகழ் பெருகும் பாதை
உலகம் போற்றும் உண்மையை
உழைப்பில் காணுவோம் நெஞ்சே
தானேவரும் புகழ் அஃது
தொழிலுக்கு உழைப்பின் விருது.
நேற்று, இன்று நாளை யாம்
நன்மையோடு வாழ்வோம்
நம்பிக்கையோடு வாழ்வோம்
நம்பி கையோடு வாழ்வோம்
வேண்டிப் புகழ் செய்தோமாயின்
வேண்டாப் பழியும் பின் தொடரும்
வேண்டாம் அப்புகழ் நம்மகத்தே
வேண்டிப் பணிவோம் நம்மகத்தே
பணிவோம் நம் அகத்தே
எட்டட்டும் நமது புகழ் இமயம் வரை
திக்கெட்டும் பரவட்டும் பணியும் வரை
விட்ட குறை தொட்ட குறை என்றிருந்தால்
விட்டு விடுங்கள் - பிறகென்ன
No comments:
Post a Comment