நெய்தல் - குத்தனூர் சேஷுதாஸ்
கருநீலச்
சீலையில் இயற்கை அன்னையாம்
கரையாய் (border) மணலாம் அதுவே நெய்தலாம்
வருணன்
கடவுளாய் வழிபட்ட இடமாம்
வாவியில் கொட்டி, ஆம்பல்...பூக்குமாம்
கருக்
கொண்ட மங்கையாய் காலை ஓளிரும்
கரையோடு அலைகள் கபடி விளையாடும்
அருணன்
இந்திரன் திசை அணுக புறப்படுவார்
அள்ளிக் கொண்டு மீன்கள் அந்தியில் திரும்புவார்
பருப்பு
வேக வைத்து கண்கள் பார்த்திருக்கும்
படகு கண்ணில் பட வயிற்றில் பால் வார்க்கும்
சுரங்கக்
கடலில் முத்து, பவளம்...இன்னும்
சூர்ப்பனகை சொல கற்பினுக்கு அணி களவாம்
சிறுத்த
இடை தலைவி, தொடரும் தலைவனும்
சிரிப்பிடையே வரும் " தொட்டால் பூ மலரும்
"
வருத்தம்
உண்டாம் சொல்லியே ஆகணும்
வரிசையாய் சமாதிகள் (இன்னும்) எவ்வளவு நீளும்?
-----------------------------------------------
உதய சூரியனையும்,
நட்சத்திர விண்மீன்
கூட்டங்களயும் மற்றும்
வெள்ளி வட்ட நிலவினையும் காண
இயற்கையன்னை படைத்த நிலம்.
பட்டினம், பாக்கம்
என்று ஆயிரமாயிரம்
ஆண்டுகள்பரதவர்
உறைந்த, உழைத்த
நிலங்களில் இன்று
ஒண்ட வந்த மக்களின்
பலமாடிக்குடியிருப்புகள்- வீட்டிலிருந்தே கடற்கரையை அனுபவிக்கலாம்
என்ற பதாகைகள வேறு!
காலையில் போனால்
மாலையில் திரும்புவோமா என்ற நிலை என்றாலும் கடலன்னையை
வாழ்வாதாரம்
அருளும்தாயாகக்
கும்பிடும் மீனவர் குழாம்.
உப்பிட்டவரை என்றும்
மறக்கலாமா, நாம்அளவோடு உணவில் சேர்த்துக்கொண்டால்!
அன்று ஒரு பூம்புகாரைக்
கடல் கொண்டது
இன்று பல பூம்புகார்கள் கடல் கொள்ள
வாய்ப்புண்டு என விஞ்ஞானம் அறிவுறுத்தினாலும்
அஞ்ஞானம் கண்களை மறைக்கிறது.
அந்தோ!
இயற்கையன்னை
வெள்ளி மணல் பரப்புகளை ஏக்கர்
கணக்கில் வரமாக அருளினும் நெகிழிக்குப்பைகளை வீசிக்கும்மாளம்போடும்
ஊர்சுற்றிக்கூட்டம்!
நெய்தல் - மோகன்
அமிர்தமும் விடமும்
ஒரு சேர வழங்கி ஒரு தத்துவ
உண்மையை உணர்த்திய கடலன்னையின்
வயிறு நோக எண்ணெயும்
தாதுக்களும்
தேடினால்
கடல்வாழ்உயிரினங்களின் கண்ணீரே கடலைப்பொங்கச்
செய்து விடாதா?
என்ன இன்னல் செய்தாலும்
தளராது
ஏழை எளியவர்க்கு
பொழுது போக்குத்
தலம் ஆக விளங்குகிறது அல்லவா கடலும்கடற்கரையும்!
No comments:
Post a Comment