கடிதம்.....
கடிதம் எழுதியவரின் எண்ணங்கள்....
தபால்காரர்....
ஸ்டாம்ப்...... இதற்காக தவமிருந்த நாம்....
இன்று வாட்ஸ் அப்பில் வரும் முக்கால்வாசி கடிதங்களை படிக்காமலே புறக்கணிக்கிறோம்......
மனிதா....என்னே உன் வளர்ச்சி
😊 சாயி 😊
-------------------------
கடிதங்கள்
செய்திகளையா
கொண்டு வந்தன..
இல்லையில்லை
உறவுகளின்
கையெழுத்தினை..
எழுத்துகளினால் அன்பினை..
அன்பான உணர்வுகளை...
உணர்வுகளின் உச்சத்தை..
வாட்ஸ்அப்பும்
மின்னஞ்சலும்
எந்திரமயமாக்கியது
நமது
அன்பினை,
உணர்வுகளை,
********************
மின்னஞ்சல் எந்திரமயமாய் செய்தியைக் கடத்தும்.
கடிதங்களோ
உணர்வுபூர்வமாய்
செய்தியைச் சொல்லும்
****************************
நாற்பதைக் கடந்தோருக்கு!
பள்ளியிலிருந்து வரும் "Promoted" கார்ட்...
அதைக் கொண்டு வரும் தேவதூதனாய் காக்கிச் சட்டை தபாற்காரர்..
அவரைச் சுற்றி தேனீக்கள் போல் பிள்ளைகள் கூட்டம்...
என்ன ஒரு பொற்காலம் அது!
எல்லாம் போச்சு...
வாட்ஸ்அப்-ஏ எல்லாமாய் ஆச்சு...
-ஸ்ரீவி
-----------------------------------
உலகினை விரைவாய் இணைக்கும் கருவிகள் இல்லா அக்காலம்.
மகனை அன்னையிடம்,
கணவனை மனைவியிடம்,
காதலனை காதலியிடம்,
நண்பனை நண்பனிடம்
இணைத்தது இந்த கடிதங்கள் தான்.
சுக, துக்க செய்திகளைப் பரிமாறிய ஒரே சாதனம்.
பல கிராமங்களில் தபால்காரர் ஒரு கதாநாயகன். ஒவ்வொரு வீட்டிலும் அவரும் ஒரு அங்கம்.
பல இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எழுதி விட்டு பணி
ஆணைக்காக தபால்காரரைக் காண வழி மேல் விழி வைத்திருந்த காலம்.
பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற விழா நாட்களில் அழகழகான வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்த
காலம்.
இராணி வார இதழில் வரும் "அன்புள்ள அல்லி " கேள்வி பதில் பகுதிக்கு சகோதரி அஞ்சலட்டையில் எழுதிய கேள்வியை, தந்தைக்குத் தெரியாமல் சிவப்பு அரக்கனின் வாயில் திணித்த தருணங்கள்.
ஒரு முறை கல்லூரி நண்பர்கள் என் முகவரி கேட்க " சுலைமான், மணப்பாறை " என்று எழுது கடிதம் வந்து விடும் என்று வம்பு பேச, அவர்களும் அவ்வாறே எழுதி அனுப்ப தபால்காரர் என்னிடம் கொடுத்த கடிதத்தை நண்பர்களிடம் காட்டி அவர்களை அதிசயிக்க விட்ட
தருணம்.
கடிதம் பற்றி எழுத கோடி உண்டு செய்திகள்.
- முகம்மது சுலைமான்
No comments:
Post a Comment