தேசிய கடற்படை நாளில்...
வடக்கே இமயத் தொடர் இயற்கை மதிலாம்
வாலாட்டும் பகைக்கு நம் இராணுவ பதிலாம்
விடாமல் நம் எல்லையின் ஒர் அங்குலமும்
விண்ணிலிருந்து கண்காணிக்கும் வீரரும் உண்டாம்
துடிப்பானப் படைவீரர் அலைகடல் மேலாம்
துஞ்சாமல் விழித்திருப்பார் இரவு பகலாம்
" கடற்படை தினம் " (4, டிசம்பர்) இன்று கொண்டாட்டமாம்
கரங்குவித்து அன்னாரை வணங்குவோமாம். 💐🙏🇮🇳
__ குத்தனூர் சேஷுதாஸ்
-----------------------------
உவர் காற்றில் காலங் கழித்து
உவகையுடனே
காவல் காப்பதை
உன்னதக் கடமையாய்
கருதி வாழும்
கப்பற் படைக்கு
வணக்கஞ் சொல்வோம்!
அவர்தம் தியாகத்திற்கு
வந்தனம் சொல்வோம்!
-ஸ்ரீவி
--------------------
தேசிய கடற்படை நாள்
----------------------
இராசேந்திரன் நாவாய் அன்று ஒரு கடல் காத்தது
இன்று மூவர்ணக்கொடி பட்டொளி வீச, முக்கடலையும்
காப்பது நமது'நேவி'!
அலை கடல் ஓய்ந்தாலும்
ஓயாது இவர்தம்,
இமைப்பொழுதும்
சோராது செய்யும்
நாடு காக்கும் பணி.
மெய்வருத்தம் பாராது
கண்துஞ்சாது கடமை ஆற்றும் இவர்களால்
நாம் நிம்மதியாக,
கண் துஞ்ச முடிகிறது.
அங்கங்கள்யாவும்
தரையில் பட வணங்கினாலும்
நாம் செலுத்தும்
அஞ்சலி, பெருங்கடலில்
ஒரு துளி நீர் சேர்த்தமைக்கு ஒப்பாகும்.
-மோகன்
No comments:
Post a Comment