எல்லாரும் பங்காளிகளே
எனக்கு, உமக்கு மட்டுமா இவ்வுலகு சொந்தம் ?
எல்லா உரிமை உண்டு எவ்வுயிர்க்கும்
பனையும், வாழையும் நம் பங்காளிகள்
பட்டாம்பூச்சி, தேனீ, பச்சைக் கிளிகள்
கனைக்கும் குதிரை, காண்டாமிருகமும் சேரும்
கரப்பான் பூச்சி, தேளும் கணக்கிலே வரும்
அனைவரும் சேர்ந்து வாழ எல்லார்க்கும் நன்று
அதனாலே வனவிலங்கு பாதுகாப்பு இன்று (4, டிசம்பர்).
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment