Tuesday, December 3, 2024

கடந்து வந்த விளக்குகள்

 கடந்து வந்த விளக்குகள்


தெருவிளக்கில்லாத காலம் அன்றாம்

   தினம் வரும் திங்களும் ஓடி ஒளியுமாம்


திரியிட்ட தீபங்கள் அந்தியில் உயிர்ப் பெறும்

   திண்ணையில் படுக்கும் வரை நின்று எரியும்


விருந்தினர் வருவதும் அடிக்கடி நிகழும்

   விளக்கைச் சுற்றி உண்போம் உணவும் 


இருளில் மிதிவண்டியில் தனியே போவோம்

   எம்ஜிஆர் பாடல்களே துணையாய்த் தொடரும்


துருப் பிடித்த அவ் வண்டியின் சத்தமே போதும்

   தொலைவில் வருவோர்க்கு சமிக்ஞை செய்யும்


வரப் பிரசாதம் பின்னர் டைனமோ வந்தது

   வண்டியின் வேகம் கூட ஒளியும் கூடியது


அரிக்கேன் விளக்கு அடுத்து உதவ வந்தது

   அதில் படித்தே வேலை, பெண்ணும் கிடைத்தது


கரும்பாம் அக்காலம் திரும்ப தான் வருமா?

   கண்ணாடி இலாச் சிறாரைக் காண முடியுமா? 


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...