Sunday, December 1, 2024

 கோரிக்கை ஏற்று...


கோர தாண்டவமாடும் எனக் கூறப் பட்டது

   குளிரூட்டச் சென்னை, ஊட்டி ஆனது


போருக்கு ஆயத்தமென அரசு அறிவித்தது

   புள்ள குட்டிகள் நினைத்து மனம் பதைத்தது


கோரிக்கை வைத்தேன் ஏற்று விலகிச் சென்றது 

   கோலம் போடச் சொல்லி வீதிகள் கழுவியது


ஏரி, குளங்கள் எல்லாம் நீரால் நிரம்பியது

   எம் பூர்வா குடியிருப்பின் எழிலும் கூடியது


தேராய் நின்ற மரமல்லி வேரோடு சாய்ந்தது

   திரு. ராஜா முகமதுவைத் திடுக்கிடச் செய்தது


சூரியன் தலை காட்ட யோசிக்க வைத்தது

   சொர்க்க வாசல் திறந்தது, ஈ ஓட்டுது


ஓராயிரம் பட்டாம்பூச்சி எங்கே போனது? 

   ஒருவரும் அறியவில்லை, கண்ணீர் வருது


" சாரே! மீண்டும் வருவேன் வேறு பேரில் " இது புயல்

   " சகோதரி மழை நீரைத் தடுக்காதீர் வழியில் "


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...