Monday, December 23, 2024

கண்ணாடி

 கண்ணாடி

--------

கண்ணாடி என்பது பிரதிபலிப்பின் உருவகம்.


நாம்அதன்எதிரே நிற்கையில் நம் "பிரதிபிம்பத்தை"

உள்ளது உள்ளபடி காட்டும்; நரை , திரை, 

மூப்புகளுக்கு மேல்போச்சு போடாமல். சமநிலை காட்டும், எதிர்பார்ப்புகள்இன்றி. அதனுடன் மனம் விட்டுப்பேசலாம்.


கண்ணாடியை நாசூக்காக , கையாளவேண்டும. இல்லை எனில் உடையும் , பல துண்டுகளாக.


"எல்லா உறவுகளும் 

கண்ணாடி 

போலத்தான் ."


நம்நடத்தையின்பிரதிபலிப்பாக, நல்லுறவுகள் உறவுகள்

உருவாகின்றன.


எதிர்பார்ப்புகள் இன்றி,"நாசூக்காக' கையாண்டால் உறவுகள்  நன்கு வளரும். 'அழுத்தம்' கொடுத்தால், உடையும்

அல்லது விலகிச்செல்லும்.


கண்ணாடியை சரியான இடத்தில் , சரியான கோணத்தில் அமைத்தால் அறை முழுவதையும் நன்கு காட்டுவது போல, உறவுகளையும் வைக்கும் இடத்தில் 

வைத்து, சரியான கோணத்தில் கையாண்டால், சண்டை சச்சரவுகளோ,

நச்சரிப்பகளோ வாரா.


- கண்டாடி பற்றிய என் பிரதிபலிப்பு( Reflections!)

- மோகன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...