Sunday, December 29, 2024

பல்லுயிர் ஓம்பும் பவித்திரமான பாசம்

 ★०★०★०★०★०★०★०★०★

பல்லுயிர் ஓம்பும்

பவித்திரமான பாசம்

★०★०★०★०★०★०★०★०★


இருவர் படுக்கும் பழைய படுக்கை

வறுமை நிலையால் கிழிந்த உடுக்கை

பெருமை க்குரிய பல்லுயிர் நேசம்

செம்மையாய்த் தெரியும் இவர்களின் பாசம்.


பாட்டனுக்கும் பாட்டிக்கும் இடையிலே

இரண்டு குழந்தைகள் உறங்கிடுவரே

பாட்டனின் அப்பக்கம் இன்னொரு

குழந்தை

காலடியில் இருப்பதோ மூன்று சிறுவர்.


மேற்கூரையோ மழையில் ஒழுகும்

பாட்டன் கையில் விரிந்த குடையாம்

அனைவரோடு பூனையும் நாயும்

கட்டில் மேலே உறங்கிடுமாம்.


ஜன்னலின் மேலே இரண்டு குருவிகள்

கட்டிலின் கீழே நிற்கும் சேவல்

உடைந்த கட்டிலை நிமிர்த்தி வைக்க

செங்கல் இரண்டு முட்டுக் கொடுக்கும்


பல்லுயிர் போற்றி பாசம் பொழியும்

இவர்களின் அன்போ பொங்கி வழியும்

கல்லும் கனியும் நேசம் பெருகும்

இதனைப் பார்க்கும் உலகம் உருகும்


பூவுல கெங்கும் இப்படி இருந்தால்

பாசமும் நேயமும் ஆட்சி செய்யும்

ஈவும் இரக்கமும்  மேலோங்கி வந்தால்

பாசமிகு உலகம் நிச்சயம் உய்யும்!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...