சொட்டச் சொட்ட...
சொட்டச் சொட்ட மரத்தில் நனைகிறது காகம்
சொல்லிச் சொல்லி அடிக்குது மழை பாவம்
கட்ட வீடு என்று கடன் அது வாங்கியதோ?
கந்து வட்டிக்காரன் வட்டி கேட்கிறானோ?
பட்டப் பகல் என்பதால் பார்க்க முடிகிறது
பரிதவிக்கும் அதன் நிலை புரிகிறது
துட்டு இல்லை எனில் நாமும் அவ்வாறே
தெருவோரம், பாலம், மரம் அதன் கீழே.
__ குத்தனூர் சேஷுதாஸ்
-----------------
கணேசன் ஐயா,
காக்கைகள் பற்றிய உம்பதிவு எம் சிந்தனையைத் தூண்டியதன் விளைவு மற்றும் 'காக்கை குருவி எங்கள் ஜாதி'
என்று நமது பாரதியே கூறி உள்ளாரே!
காகங்கள்
----------
காக்கைகள்
பாரம்பரியத்தை விடாது கடைப்பிடிக்கும்
இனம்,ஆயிரமாயிரம்
ஆண்டுகளாக-மழையில் நனைந்து, வெயிலில் உலர்ந்து;மழையங்கியோ , குடைகளோ, ஆறு அறிவு படைத்த நமக்குத்தான்!
இன உணர்வு என்று பேசி வாய்ச்சொல்லில்
வீரம் காட்டும் மாந்தர்க்கு,
டில்லிக் காக்கையோ,
சென்னைக் காக்கையோ,'கா கா'
என்றுதான் கரைகின்றன; இனத்தோழரைப் பகிர்ந்துண்ண அழைப்பு விடுக்கின்றன!கறுப்பாய் இருந்தாலும்
உள்ளம் வெண்மை.
காலத்துக்கு ஏற்றவாறு
உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொள்ளும் போலும்!- முன்னோரை நினைத்து சாதம் வைத்தால் தீண்டாது( ஓரக் கண்ணால் ஏளனப்பார்வை வேறு!)
ஆனால் ' கலவைச்சிற்றுண்டியை( மிக்ஸர்) விரும்பிக்கொத்தும்!
இவற்றின்இறக்கைகள்
தத்துவ ஞானிகள்- நீர்த்துளிகளில் நனைந்தாலும் துளிகள் ஒட்டுவதில்லை!
- மோகன்
No comments:
Post a Comment