தொலைக்காட்சி திரையில் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...
வெளியே வந்து
கருவானித் திரையில் மின்னும் நட்சத்திரங்களை எண்ணினேன்..
சிறு வயதில் பார்த்து எண்ணியது..
பல நாள் மீண்டும் எண்ண வேண்டும் என்று எண்ணியது..
இன்றாவது எண்ணு
என்று மின் தடை சொல்லியது!
இலட்சியதின் தடை
விலகியது!
- சாய்கழல் சங்கீதா
-------------------------------------
தட்டுப்பாடே இல்லாத
மின்தடைகள்!
கட்டுப்பாடே இல்லாத
மின்கட்டண உயர்வுகள்!
வேர்க்கிறது!
ஆனால் மெழகுவர்த்திகளும் கைவிசிறிகளும்
என்றும் நம்துணை நிற்கும்என்ற ஆறுதல்!
-- மோகன்
------------------------------
No comments:
Post a Comment