பொம்மை
-------
மண்ணைப்பிசைந்து
கலை படைக்கும் கலைஞர் குடும்பம்
வயிறாற சோற்றைப்பிசைந்து
உண்ட நாட்கள்எவ்வளவோ?
இவர்தம் விரல்கள் வண்ண வடிவங்களைப் படைத்துப் பழக்கப்பட்டவை
பணத்தை எண்ணி அல்ல.
காகிதக்கூழ் ( paper mache) பொம்மைகள்
சுற்று சூழல் மாசைத் தடுக்கும். இவர்களின் மண் பொம்மைகள்
பல நூறு ஆண்டு களாக அதைத்தானே செய்து வந்தன?!
தெய்வ உருவங்களின்
கண்திறக்கும் இவர்களின் வாழ்வாதாரம் உயர கடவுள் என்று கண் திறப்பார்?
மனிதர்கள் நாம் இவர்களின் படைப்புகளை வாங்கி இராமருக்கு அணில் போல உதவி புரியலாமே!
- மோகன்
No comments:
Post a Comment