கூட்டுக் குடும்பத்தில் கடைசி இடமாம்
குத்து விளக்கு என்று குத்திக் காட்டுமாம்
மாட்டுப் பெணென்று மற்றொரு பெயராம்
மாட்டி வர வேண்டும் இதன் பொருளாம்
காட்டும் படத்தில் ஒரே பெண் என்றால்
கண்டிப்பாக அது இவள் இல்லையாம்
பாட்டுக்கொரு புலவன் உயர்த்திப் பிடித்தும்
பாவம் மனைவி நிலை பரிதாபமாம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
-------------------------------------------------------
No comments:
Post a Comment