தபாலில் கடிதம்.. அஞ்சல் அட்டை. .
நமக்கா என ஆசையாய் படித்தால் ..சாமியின் பெயரில் ஆசாமியின் கடிதம்..இக்கடிதம் படித்தவுடன் நூறு பேருக்கு இதே செய்தி அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பவும்.. இல்லையேல் ....என மிரட்டல் ..இது அன்று..
இதே இன்று.. புலனத்தில் முன்னனுப்புச் செய்தியாய்..
தொடர்பு கொள்ளும் முறை மாறினாலும் ..
செய்தி மாறவில்லை..🙄
ஒரு முன்னேற்றம் ..
இப்பொழுது இச்செய்தியை கையொடிய எழுதாமல் மொத்தமாக புலனத்தில் பகிர்ந்து விடலாம்..👍🏻
செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் இயற்கை நுண்ணறிவில் இன்றும் அவ்வப்போது ஓரறிவு மறைந்து விடுகிறது..🙄
- இலாவண்யா
----------------------------------
#Sunday trending#
நான் எழுதும்
ஒரு கடிதம் 🌹🌹
என் அன்புள்ள அப்பா, அம்மா, பாட்டி, அம்பை அம்மா (என் மாமியார் ) எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள் 🌹🌹
நீங்கள் எல்லோரும் என் கணவரும் சேர்ந்து உங்கள் உலகத்தில் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 🙏🙏🙏
இங்கு பூலோகத்தில் நாங்கள் எல்லோரும் நலம்,,,, எப்போதும் உங்களை நினைக்கிறோம்,,,, நீங்கள் அமைத்து குடுத்த பாதையில் எங்கள் வாழ்க்கை நல்லபடியாக நடத்தி கொண்டு நிம்மதியாக இருக்கிறோம்,,,,
இந்த வயதில் எங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு இருக்கிறோம்,
சுலோகம், கோவில்,வாக்கிங்,உடற்பயிற்சி எல்லாம் செய்கிறோம்..... சோசியல் நெட்ஒர்க்கில் பழைய அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம்,,,,,
எங்கள் காம்ப்ளெக்ஸில் நடக்கும்
சாம்பிராதய பஜனைகளிலும் மற்ற தெய்வ திருமணங்களிலும், பாரதி தமிழ் சங்க நிகழ்ச்சிகளிலும்,,,, கலந்து கொண்டு சந்தோசமாக இருக்கிறோம் 😊
இங்கு உங்கள் குழந்தைகள்,மாப்பிள்ளைகள், மருமகள்கள்,,,
உங்கள் பேரன், பேத்திகள், அவர்கள் குடும்பம்
கொள்ளு பேரன்,, பேத்திகள்
எல்லோரும் நலம்
எல்லோரும் உங்கள் போட்டோ பார்த்து உங்களை எல்லாம் நன்கு தெரிந்து கொண்டு உள்ளார்கள் 😘😘🙏
நீங்கள் எங்களுக்கு சொல்லி குடுத்த நல்ல விஷயம்களையும்,, அறிவுரைகளையும் ,, கதைகளையும் நாங்கள் அவர்களுக்கு இப்போ சொல்லுகிறோம்,,,, காலத்தை பின் நோக்கி பார்க்கிறோம்,,,
மொத்தத்தில் உங்கள் எல்லோருடைய ஆசிர்வாததால் எல்லோரும் நன்றாக,, நலமாக இருக்கிறோம் 🌹🙏
எங்களை பற்றி கவலை படாமல் நீங்கள் எல்லோரும் நிம்மதியாக இருங்கள் 🌹🌹🙏🙏
ஆனந்த கோடி
நமஸ்காரங்கள் 🙏🙏🙏
இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
குழ்ந்தைகள் 🌹🌹
- மைதிலி நீலகண்டன்
No comments:
Post a Comment