உரிய தண்டனை
அதரமே ! உன்னால் அழகுத் தமிழ் பேசுவேன்
அநியாயம் எதிராக உன்னோடு ஏசுவேன்
இதழாக இருந்து இனிய தேன் சுரப்பாய்
ஈயாய் சுவைத்தாரை கவி பாட வைப்பாய்
கதவாக உள்ளே கண்டதை அனுமதிப்பதில்லை
கடுஞ்சொல் எளிதில் வெளி விடுவதில்லை
உதடே ! உன் மீது சாயமா ! அது குற்றம்
உரிய தண்டனையோ பணி இடமாற்றம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment