◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆
*மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா - முழு விவரணம்*
◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆
இனிய விழாவின்
இமாலய வெற்றி
~~~~~~~~~~~~~~
*நற்றுணையாவது நம் தமிழே!*
நேற்று, 25~8~24 ஞாயிறு அன்று நமது தமிழ்ச்சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா மிகச் சீரும் சிறப்புமாக நடந்தேறியது.
முதல் நிகழ்ச்சியாக,
*சிறப்புவிருந்தினர்கள் மஞ்சு சௌத்ரி, மைதிலி ராமையா, நமது உறுப்பினர்கள் மாலதி விஸ்வநாதன், கமலா சாரங்கராஜன் மற்றும் ஹேமா வெங்கடராமன்* ஆகியோர் குத்து விளக்கேற்றிய பின் *தமிழ்த்தாய் வாழ்த்து* பண்ணிசைக்கப் பட்டது.
அனைவரையும் வரவேற்கும் முகத்தான் மிக நேர்த்தியான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய *வரவேற்புரையை திருமதி. சங்கீதா சிறப்புற வழங்கினார்.* நல்ல துவக்கம் நிகழ்ச்சியை நல்ல முறையில் அமைத்திடும் என்பதாக அவர் உரை அமைந்தது.
அதன் பின் *தமிழரின் வீர விளையாட்டு சிலம்பாட்டம்* நடைபெற்றது. பூர்வாவின் செல்வங்களான சிறுவர், சிறுமிகள் கம்பு, வாள், வேல் சுழற்றி மின்னல் வேகத்தில் சுழன்றாடியது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
*சிலம்பாலயா சரவணன் அவர்களும், நமது நிர்வாகக் குழு உறுப்பினர் வித்யா* அவர்களும் சிறப்பாக இந்நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
*சிறப்பு விருந்தினர் அலையன்ஸ் ஸ்ரீனிவாசன்* அவர்கள் அச்சிறார்களுக்கு அன்புப் பரிசுகள் வழங்கினார். பிறகு சிறப்புரை நிகழ்த்தினார். பாரதியின் படைப்புகளை சிறார்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
பிறகு, *இன்னிசை நிகழ்ச்சி* த் துவங்கியது. பாரதியின் பாடலுடன் துவங்கிய நிகழ்ச்சி அனைத்து இன்னிசைக் குயில்களின் கானமாகத் தொடர்ந்தது. பார்வையாளர்களின் உற்சாகக் கரவொலிகளும், ஆரவாரமும் நிகழ்ச்சியின் வெற்றிக்குக் கட்டியங் கூறின. 23 பாடகர்கள் தங்கள் முத்திரை பதித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இன்னிசைக் குயில்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் *திருமதி மஞ்சு சௌத்ரி அவர்களும் திருமதி. மைதிலி இராமையா அவர்களும்* அன்புப் பரிசுகளை வழங்கினர்.
*திருமதி மஞ்சு சௌத்ரி* தமது வாழ்த்துரையில் ஒரே குடும்பமாக நாம் செயல்படுவதைக் குறிப்பிட்டு வாழ்த்தினார். *குறிஞ்சிக் கவி மைதிலி இராமையா* அவர்கள் திறமையாளர்களைக் கண்டறிந்து ஊக்குவித்து மேடையேற்றும் நம் பாங்கினை கல்லைச் செதுக்கி சிற்பமாக்குவதற்கும் வைரத்தைப் பட்டைத் தீட்டுதற்கும் ஒப்பிட்டுப் பாராட்டினார்.
ஓராண்டு கால செயல்பாட்டினை தனது உரையில் *தலைவர் ஸ்ரீவெங்கடேஷ்* விளக்கி, இதுவரை *102* திறமைசாலிகளுக்கு நாம் மேடை கொடுத்ததோடு *135* போட்டியாளர்கள் பங்கேற்ற 3 போட்டிகள், 23 சிறார்கள் கலந்திட்ட பயிலரங்கம் ஆகியவற்றை நடத்தியதைக் கூறி எதிர்காலக் கடமைகளையும் சுட்டினார்.
பிறகு அனல் பறக்கும் கனல் தெறிக்கும் சொற்சிலம்பம் *பட்டி மன்றம்* அரங்கத்தை கலகலப்பாக்கியது. பேச்சாளர்கள் அறுவரும் போட்டி போட்டுப் பேசியதும் *நடுவர் கலைமாமணி சி.வி. சந்திரமோகன்* அவர்களின் நகையுணர்வோடு கூடிய சொல்லாட்சியும் கேட்போரை பரவசங் கொள்ளச் செய்தது. நடுவரின் தீர்ப்பு அனைவரையும் மகிழ்வுற வைத்தது.
பட்டி மன்றப் பேச்சாளர்களுக்கும் பேச்சுப் போட்டி/செய்யுள் ஒப்புவித்தல் போட்டி வெற்றியாளர்களுக்கும் திரு சந்திரமோகன் அவர்கள் அன்புப் பரிசுகள் வழங்கினார்.
நிறைவாக, *நிதிச் செயலர் திரு. சாய்ராம்* அவர்கள் நன்கொடையாளர்கள்/புரவலர்கள் அனைவரையும் பட்டியலிட்டு, நம் புலனக் குழுவில் உள்ள 180 பேரில் 90 பேர் மட்டுமே சந்தாதாரர்கள் என விளக்கி நமது குழுவே புனரைமைப்பது அவசியம் என வலியுறுத்தியதோடு நமது எதிர்காலத் திட்டங்களைக் கூறி நன்றி நவின்றார்.
தேசியப் பண்ணுடன் ஆண்டு விழா இனிதே நிறைவுற்றது.
விழா சிறக்க கருத்தாலும் கரத்தாலும் உழைத்திட்ட - பொருளுதவி செய்து உதவிய - அனைத்து நல்லிதயங்களுக்கும், கலந்து கொண்டு இரசித்து மகிழ்ந்த பூர்வா வாசிகளுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிய மலர்விழி, மகாலக்ஷ்மி இருவரின் பங்களிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
வெற்றிகரமாக நடந்தேறிய முதலாம் ஆண்டு விழாவின் பங்கேற்பாளர்கள் பட்டியல்:
சிலம்பம்
°°°°°°°°°°°°°°
1) எஸ். வி. நிவர்சனா
2) வே. ச. ரம்யா
3) வே. ச. குரு ஸ்கந்தா
4) இர.ஆராதனா
5) ஆராதனா கோவிந்தராஜன்
6) செ.உத்ரா செல்வி
7) சை. ஆயிஷா ஷனாஸ்
8) ஞா. நி. சஹானா
பாரதியார் பாட்டு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1) புவனேஸ்வரி
2) பிருந்தா
மெல்லிசை
°°°°°°°°°°°°°°°°°°
1) விஜயலட்சமி
2) ஶ்ரீநிகேதன்
3) கிரிஜா,
4) ஞானேஸ்வரன்
5) சுந்தரம்
6) சஹானா (ஜூனியர்)
7) துர்கா சாய்ராம்
8) Dr. செல்வம்
9) சஹானா ( சீனியர்)
10) அய்யாசாமி
11) சுப்ரியா
12) பால கிருஷ்ணன்
13) சுவாதி
14) சாய்ராம்
15) சம்யுக்தா
16) பிரியா ஆரத்தி
17) கணேசன்
18) நிவர்ஷனா
19) துரைராஜ்
20) ஆராதனா
21) பிச்சைமணி
பட்டிமன்றம்
°°°°°°°°°°°°°°°°°°°
1) ஹரீஷ்,
2) மலர்விழி,
3) மஞ்சுளா,
4) மல்லிகா மணி,
5) மகாலக்ஷ்மி
6) வித்யா சிவகுமார்
நடுவர்: கலைமாமணி திரு. சந்திரமோகன்
அனைவருக்கும் நமது பாராட்டுதல்களும் நன்றிகளும் உரித்தாக்குகிறோம்
००]०००००००००००००००००
*நன்றி பாராட்டுகிறோம்!*
००००००००००००००००००००
முதலாம் ஆண்டு விழாவின் வெற்றிக்கு அடிகோலிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் உளமார்ந்த நன்றிகள் 🙏
*புரவலர்கள்:*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1) தனுபா,
2) ரமணி (விஜயா கிச்சன்,
3) பிரியா ஆரத்தி (வீட்டு சுவை)
4) பப்பு காமேஸ்வரன் (அமுதம்ஸ் ஜெலாடோ)
5) அகல்யா
6) விஜய் கணேஷ் (வீடியோக்ராஃபர்)
*நன்கொடையாளர்கள்:*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1) Dr. செல்வன்,
2) தியாகராஜன்
3) சுந்தரம்
4) பி.ஆர். ஆண்டாள்,
5) நிவர்சனா,
6) கணேசன்,
7) பிரேமா சேதுராமன்,
8) முகமது சுலைமான்,
9) ஐயாசாமி,
10) மோகன்,
11) காமாக்ஷி
12) கிரிஜா ஞானேஸ்வரன்,
13) விஜயலக்ஷ்மி,
14) மல்லிகா மணி
15) லக்ஷ்மி நாராயணன்,
16) மலர்விழி,
17) லாவண்யா,
18) லலிதா கிருஷ்ணன்
19) ஸ்ரீனிவாசன்
20) ஜி. விஸ்வநாதன்,
21) மயில் வாகனன்
22) சந்தானம்
நாம் அன்புப் பரிசாக வழங்கிய நூல்களில் 64 நூல்கள் *திரு. அலையன்ஸ் ஸ்ரீநினிவாசன்* அவர்களால் நமது சங்கத்துக்கு வெகுமதியாக வழங்கிப்பட்டது.
*தன்னார்வலர்கள்:*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1) தியாகராஜன்,
2) சு.தே. நாகராஜன்
3) வெ. நாகராஜ்,
4) ஸ்ரீனிவாசன்,
5) லக்ஷ்மி நாராயணன்,
6) செல்வா,
7) அனிதா,
8) மல்லிகா,
9) பிரபு குமாரி,
10) சுபாஷினி
11) லாவண்யா
இவர்கள் அனைவருக்கும் சிரந்தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
தமிழ்த் தாயின் தாழ் பணிந்து மகாகவியை நெஞ்சில் இருத்தி நம் தமிழ்ப் பயணத்தைத் தொடர்வோம்.
அன்புடன்,
*ஸ்ரீவெங்கடேஷ்*
*தலைவர்.*
No comments:
Post a Comment