தோப்பில் விளைந்து
ரகம் ரகமாய்
"App" ல் வரும்
பேழையில்(தோல்)
பாதுகாப்பாக உள்ள வாழை ....
மருந்தடிக்கப்பட்டு
மெழுகேறி
" App" ல் வரும் ஆப்பிளை விட மேல்.
முக்கனியில்
மூன்றாம் கனியாம்
மங்கல கனியாம்
வாழை...
"கோழை"(சளி கட்டுவது) என்று
ஒதுக்காதீர்!!!
( ஆஸ்துமா நோயாளிகள் சில வகைகளை தவிர்க்க வேண்டுமாம்!)
- சங்கீதா
No comments:
Post a Comment