Sunday, August 25, 2024

குயில்கள் கொண்டாட்டம்

 குயில்கள் கொண்டாட்டம்


குயில்களின் கொண்டாட்டம் நேற்று நிகழ்ந்தது

   கொடுக்கு மீசை பாடல் இரட்டை குயில் இசைத்தது


பயிற்றுவித்த இசைக் குயில் பாடிப் புலம்பியது

   பாவம் வீதியை வீடாக எண்ணியது


" கயிற்றில் கட்டுண்ட கண்ணனைக் கண்டாயோ?"

   கானக் குயிலது காற்றிடம் கெஞ்சியது


மயக்கும் குரல் குயில் உண்மை ஒன்று சொன்னது

   மலர்கள் எல்லாமிலும் மணம் உண்டு என்பது



புத்தம் புதுக் காலை குட்டிக் குயில் வியந்தது

   "பூக்கள் ஒவ்வொன்றும் வாழ்வு போர்க்களம்" என்றது


மொத்தம் சொன்னது "சின்னச் சின்ன ஆசை "என்று

   "முடியாத தொடர் உறவு" இது மீசையிலாதது


சத்தமாய் மற்றதை சங்கீதமென ஜோடிக் குயில்

   சதி ஒன்று செய்தது பளிங்கு மாளிகையில்


குத்தகை மொத்த உலகாம்  பேரரசைக் குயிலொன்று

   குளிருதாம் சில்லென்ற தீப்பொறி வேறொன்று



"பாடாத பாட்டெல்லாம்" பாடியது ஒன்று

   "பார்வை பட கண் படும் போகாதே" இன்னொன்று


வாடா போடா தொனியில் "உன்னை அறி" என்ற ஒன்று

   வருத்தமே குரலாய் "என்னுள்ளே " இதுவொன்று


கோடை காலக் காற்றை கூவி அழைத்த ஒன்று

   குமுறலில் நினைப்பதெல்லாம் நடக்காது தெரிந்தது


தாடையில் கையாம் "எத்தனை நாள் ஆகுமோ"

   தாங்காமல் எலாம் இனி ஐஸ் க்ரீம் உண்ணுமோ?


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...