முதுமையிலும் உழைப்பு
தள்ளாத வயதிலும்
துள்ளும் மனமும்
துடிப்புடன் உடலும்
உழைக்கும் முனைப்பும்
இருந்தால் வரம்
தள்ளாத வயதிலும்
இயலாமை என்றாலும்
உழைத்தால் தான்
உணவென்றால்
கொடுமை கொடுமை
வரம் கிடைப்பது
கடவுள் அருள் மற்றும்
தன் மன உறுதியால்...
கொடுமை என்பது
மனமில்லா மனிதர்களால்..
- அமுதவல்லி
----------------------------------------
ஓய்விலா முதுமை
எதுகை, மோனை இலா கவிதைக்கு அழகேது?
இரக்கமிலா செல்வம் இவ்வுலகில் எதற்கு?
முதுமையிலும் உழைத்தால் தான் பல வீட்டில் சோறு
முந்நூறு கோடி வாங்கும் நடிகர்கள் வேறு
உதவி கேட்கும் தகுந்தவர்க்கு தரலாம் தாராளம்
உண்மையில் வாரிசு இலா வைப்பு நிதி (வங்கியில்) ஏராளம்
அதனால் முதியோரிடம் பேச வேண்டாம் பேரம்
அச் சிறு தொகை ஆக்கும் அவர் வயிறு ஈரம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
----------------------------------------------
இளமையில் வறுமை
முதுமையில் உழைப்பு
----------------------
இளமையில் நல்ல
உடல்நலம் ;உள்ளம்
நிறைய ஆசைகள்
ஆனால் வறுமை நோய்
பீடீத்ததே ஐயா!
கொடுமை கொடுமை அந்தோ!
முதுமை வரை உழைத்து உழைத்து
உடல் ,கொழுப்பும் சர்க்கரையும் சேர்ந்த
மூட்டையானதே!
ஆயிரங்கள் பல இருந்தும் வசதிகள் இருந்தும்
அனுபவிக்க முடியவில்லை
இருக்கும் ஆனால்
இல்லை என்பதற்கு
இளமையிலும் முதுமையிலும் வெவ்வேறு அர்த்தங்கள்!
உணர்வதற்கு செலவிட்டது ஒரு வாழ்நாளை!
-மோகன்
--------------------------------------
No comments:
Post a Comment