சிலம்பச் சிறார்கள் காட்டிய வீரம்!
தேனாறாய்ப் பாய்ந்த கானம்!
அனல் பறந்த அறுவரின் விவாதம் ...
எடுத்ததே வேகம்!
அதைத் தணித்ததே
நடுவரின் விவேகம்!
ஆடைகள் காட்டிய
மினுமினுப்பு
சிரிப்புகள் காட்டிய
பளபளப்பு
தேனீர் வேளையில்
லேசான சலசலப்பு
நிர்வாகக் குழுவின்
சுறுசுறுப்பு
சிறப்பு விருந்தினர்கள் வரும்போது பரபரப்பு
"சீனியர் கிட்ஸ்" ன்
விறுவிறுப்பு
கைத்தட்டலுடன்
ஆர்ப்பரிப்பு
அரங்கம் அதிரும்படி
கலகலப்பு
நன்றிகள் கூறி
பரிசளிப்பு
மொத்தத்தில் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் ..........
மிகச்சிறப்பு!!!
- சங்கீதா
No comments:
Post a Comment