அன்பும் வம்பும்
ஆழ்ந்த ஒரு நட்பாம் அவனுக்கும் எனக்கும்
அடுத்த வீட்டில் தான் வாழ்கிறான் அவனும்
கூழ் குடித்த இளமை தொட்டே தொடர்கிறது
குடி பெயர்ந்து வாழ்கிறோம் நகரம் வந்து
தோழன் கடன் வாங்க உத்தரவாதம் (surety) தந்தேன்
தொகையை வட்டியோடு நான் தான் கட்டுகிறேன்
வாழ்நாளில் இது போல் இனி தவறிழையேன்
வம்பை விலைக்கு வாங்கவும் மாட்டேன்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
-----------------------------
அன்பும் வம்பும்
--------------
அன்பு ஆழப்பாய்ந்து
வேரூன்றி உறவு மரங்களை வளர்க்கும்
வம்பு ஊதல்காற்றாய்
பரவி உற்றாரை மாற்றாராக மாற்றும்
அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்?
வம்புக்கும் உண்டோ
வாய்ப்பூட்டு?
- மோகன்
----------------------------
அன்பு செலுத்துவோரிடம்
வம்பேதும் செய்யாமல்
அன்போடு அவர்களை நாடு.
வம்பு செய்வோரிடம் அன்பினைக் காட்டாது
காததூரம் நீ ஓடு.
- ஸ்ரீவி
------------------------------
No comments:
Post a Comment