எல்லாம் ஆச்சு
விடுத்த அழைப்பது விருந்தினர்க்கு போயாச்சு
விருப்பமுடன் வருவதும் உறுதி செய்தாச்சு
முடியாம் தலையில் அதை திருத்தியாச்சு
மூக்கின் கீழ் மீசை கருப்பாக்கியாச்சு
படித்த பாடல் வரிகள் மனப்பாடம் ஆச்சு
பதாதைகள் எங்கும் வலம் வரலாச்சு
தடி கொண்டு சுற்றும் சிலம்பம் யோசிச்சு
தள்ளி நிற்கணும் தாய் சொல்லியாச்சு
அடிதடியில் முடியுமோ அச்சம் வரலாச்சு
அவ்வளவு பட்டி மன்ற ஒத்திகை ஆச்சு
விடியுமெப்போ ஞாயிறு எதிர் நோக்கலாச்சு
" வீட்டு சுவை " டி, பிஸ்கட் நாவில் ஊறலாச்சு
வடித்த கஞ்சி காலில் கொட்டியது போலாம்
வரிந்து கொண்டு ஸ்ரீவி, சாய்ராம், எல்லாம்
குடியிருப்பில் " மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் "
குழந்தைக்கு முதலாண்டு இந்த கொண்டாட்டம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment