*வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு ஆறாம் அமர்வு விவரணம்*
6 12 25 மாலை 5 மணிக்கு கார்ட்ஸ் அறையில் ஆறாம் அமர்வு நடைபெற்றது.
ஐந்து மணிக்கு குழந்தைகளுக்கான வாசிப்பு வட்டம் துவங்கியது. அதில் கலந்து கொண்ட சிறார்கள்:
ஆராதனா,
ஹர்ஷிதா,
சாய் பிரணவ், ருத்விக்,
ஜனனி,
அவினாஷ்,
லக்ஷித்,
ஸ்ரீராம்,
அர்ஃபா,
அர்மான்,
ஸ்ரீ நிகேதன்,
நித்தின்,
உத்ரா செல்வி,
ஆயிஷா.
இந்த அமர்வில் பொறுப்பாளர் மகாலட்சுமி வந்திருந்த குழந்தைகளை மூன்று அணிகளாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கதையை கொடுத்தார். அந்தந்த குழுவில் இருந்த குழந்தைகள் அதை படித்து அதை வைத்து சித்திரம் வரைந்ததோடு அக்குழுவில் இருந்து ஒருவர் அந்தக் கதையை பிறருக்கு சொன்னார். இதன்மூலம் குழந்தைகள் படிக்கும் ஆர்வத்துடன் அதை உள்வாங்கி பிறருக்கு செல்ல திறமை உணர்வதுடன் அந்தக் கதையை ஒட்டி தங்கள் கற்பனையை விரித்து சித்திரம் வரைய வைத்தது ஒரு நல்ல முயற்சி. கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதும், நல்ல சித்திரத்தை வரைந்ததும், நல்ல முறையில் அந்த கதையைச் சொன்னதும் மன மகிழ்வைத் தந்தது.
நிறைவாக அந்தக் கதைகளை எழுதியது நமது பூர்வாவிலுள்ள ஒருவரே என ஒரு ஆச்சரியத்தை கொடுத்து அந்த எழுத்தாளரையும் அறிமுகப்படுத்தினார் அவர் நமது நிர்வாக குழு உறுப்பினர் அமுதவல்லி அவர்கள்.
கதாசிரியர் அமுதவல்லி பின்னர் குழந்தைகளுக்கு கதை எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சில வழிமுறைகளைக் கூறினார். பல குழந்தைகள் கதை எழுத விருப்பம் தெரிவித்தது வியப்பைத் தந்ததோடு, நமது தமிழ் மொழியின் எதிர்காலம் இக்குழந்தைகள் கையிலே ஒளிர்விடும் என்ற நம்பிக்கையைத் தந்தது.
அந்தக் குழந்தைகள் வரைந்த சித்திரங்கள் இங்கே நமது உறுப்பினர்கள் கவனத்திற்காக பகிரப்படுகின்றன.
அதன் பின்னர் பெரியவர்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு துவங்கியது. அதில் கலந்து கொண்டோம்:
ஸ்ரீ வெங்கடேஷ், மகாலட்சுமி,
தேவி அருண், கணேசன்,
இமான் சுல்தானா, அமுதவல்லி, சுகன்யா, தியாகராஜன், சங்கீதா,
ரஷீதா,
சுப்ரமணியன், லட்சுமி, மல்லிகாமணி.
இந்த அமர்விலும் ஜெயமோகன் எழுதிய அறம் நாவலின் ஒரு கதையான *சோற்றுக் கணக்கு* எனும் கதை வாசிக்கப் பட்டது. இந்தக் கதையும் கேட்போர் மனங்களை பாரமாக்கியது, கண்களை ஈரம் ஆகியது. வறுமையின் கொடுமையை பற்றி விவரித்த ஒவ்வொரு வரியும் கேட்போர் மனதை உருக்கியது. வாசித்த திருமதி. சங்கீதா ஏற்ற இறக்கங்களுடன், நல்ல குரல் வளத்துடன், கேட்போர் கதையுடன் ஒன்றிப்போகும் அளவிற்கு மிகச் சிறப்பாக வாசித்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் அவருக்கு புத்தகம் கொடுத்து உதவிய லக்ஷ்மி நாராயணன் அவர்களுக்கும் நன்றிகள்.
அதன் பின், சண்முகசுந்தரம் ஐயா அவர்கள் இலக்கண வகுப்பு எடுத்தார்கள். ஏற்கனவே நடத்திய பகுதியை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தியதோடு, புதிதாக இன்று ஆசிரியப்பா விதிகளைப் பற்றி விளக்கினார். இலக்கணம் என்றாலே கசப்பு மருந்து என இருப்போர் மத்தியில் இலக்கணத்தை நன்கு படித்து, உள்வாங்கி, அதனை மிக எளிமையாக பிறருக்கு புரியும் வண்ணம் வகுப்பு எடுக்கும் ஐயாவின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. அவருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு, அதிக அளவில் இந்த வகுப்பில் கலந்து கொள்வதும், அந்தப் பாடங்களை உள்வாங்குவதும் மட்டுமே.
மீண்டும் ஏழாம் அமர்வில் சந்திப்போம்
*ஶ்ரீவி*
தலைவர்.
No comments:
Post a Comment