Thursday, November 27, 2025

விதை!!

 வேடன் ஒருவன் விரித்தானாம் ஒரு வலை

புள்ளினங்களை வேட்டையாட பின்னப்பட்ட சதிவலை

சிக்கின புறா எல்லாம்

வழி தெரியாமல் விழித்தன

பரிதாபமாய்...

புத்திசாலியாய் தலைமை புறா வழி உரைக்க எல்லா புறாவும் முடிவெடுத்தன ஒரு மனதாய்...

ஒற்றுமை என்னும் பலம் கொண்டு

வலையை ஒன்றாய்த் தூக்கிக் கொண்டு

வானம் நோக்கி எழுப்பிப் பறந்தன

வேடன் ஏமாற எட்டாமல்

திரிந்தன..

எலிகளும் நட்புடன் உவந்தே உதவின

வலையைக் கடித்துக் கடித்துக் குதறின 

புறாக்கள் எலிகளுக்கு நன்றியுரை பாடிவிட்டு

ஒன்றாய் கூறின..

"தப்பித்தோம் பிழைத்தோம்"

பால்யத்தில் இக்கதையையும் நாம் அறிந்தோம்


அநேகமாய் அனைவருக்கும் பிடித்த கதை

ஒற்றமை, தலைமைப் பண்பு,புத்திசாலித்தனம்,

காலத்தினால் செய்யும் உதவி, நட்பு, நன்றி அறிதல் என

எல்லாம் அறிய போடப்பட்ட விதை!


- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...