உப்புமாவும், பூனையும்
கப்பில் ரவை எடுத்து கடாயில் கொஞ்சம் வறுத்து
கன்றாய் கு(கொ)திக்கும் நீரில் அதைச் சேர்த்து
உப்பும் சிறிதிட்டு கிளறினேன், கிளறினேன்
உள்ளங்கை வைய, உடன் நெய்யும் சேர்த்தேன்
அப்பா அழைத்தார் அடுக்களை மறந்தேன்
ஆனது பல மணித்துளி ஐயோ! பறந்தேன்
சப்புக் கொட்டியபடி வெளியே வந்தது பூனை
சாடினேன் தொடர்ந்த அப்பா தடுத்தார் எனை
" வையாதே! இன்று பூனைகள் தினம் "
உபயம்: ஸ்ரீவி ஐயா மற்றும் நம் சங்கீதா
__. குத்தனூர் சேஷுதாஸ் 8/8/2025
No comments:
Post a Comment