Friday, August 8, 2025

சர்வதேச பூனைகள் தினமாம் இன்று! (ஆகஸ்ட் 8)

 வீடுகளில் சுற்றித் தெரியும் 

பூனைகள் புலிக் குடும்பமாம்!

விலங்கியல் அப்படித்தான் சொல்கிறது.


அப்படி எனில், 

புலியைப் பார்த்து 

பூனை சூடு போட்டுக் கொண்டது என்கிற பழமொழி எப்படி வந்தது?


நிற, மத, இன வேற்றுமையை வீழ்த்திடவே 

நம் மகாகவி பூனைக் கவிதையை தான் எழுதினான். 


‘வெள்ளை நிறத்தொரு பூனை’... என்று துவங்கி ‘அவை யாவும் ஒரே நிறம் என்றோ..’ என்று முடித்தான்...


ஒற்றுமையின் சின்னமாக பாரதியின் சிந்தனையில் தோன்றியது பூனையே. 


வேற்றுமை வந்து தீவிரவாதம் தலை தூக்கி போதும் 

தலைவர்களை காக்கும் படை பூனையே..

(கருப்புப் பூனை)


எலிகளுக்கோ பூனை வைரி ..

குழந்தைகளுக்கோ நல்ல நண்பன். 

மியாவ் எனும் ஒலியெழுப்பா குழந்தைகள் உண்டோ..!

மியாவ் எனும் ஒலி கேட்டு மகிழாத மழலைகள் உண்டோ..!!


பசும்பாலை விரும்பிக் குடிக்கும்

எலிகள் கண்டால் துரத்திப் பிடிக்கும்.


வைரங்களை Cat's eye என சொல்வார் உண்டு.

மாஃ"பியா அடியாளை 

Cat's paw என்போரும் உண்டு.


புசு புசு ரோமம் கொண்டு 

நாசியின் அடியில் மீசை கொண்டு 

மினு மினுக்கும் கண்களும் உண்டு 

அங்கும் இங்கும் அலைவது உண்டு. 


சர்வதேச பூனைகள் தினமாம் இன்று! 

(ஆகஸ்ட் 8)


- ஸ்ரீவி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...