கவிஞன் என்பவன் இல்லாததை கூட கொண்டு வருவான்(ள்).
இல்லாததை கூட
நீக்குவான்...
சொற்களை கொண்டு வந்து
சொல்லோவியம் வரைவான்..
தேவையற்ற சொல்லென்று
உளியில்லா சிற்பியாகி
எழுதுகோல் கொண்டே சொல்லோவியத்தை
உடைப்பான்!
சேர்ப்பான்!
உடைந்த கவிதைக்கு உயிர் கொடுப்பான்..
கற்பனை சிறகு விரிப்பான்
கல்லுக்குள் கிணறு
காண்பான்
கற்பனையில்
கனலையும் விழுங்கிக்
களிப்பான்
ஏன் இப்படி?
எதற்கு?
எவ்வாறு?
எந்த வினாவுக்கும்
விடையளிக்க தேவையில்லா
சுதந்திரமானவன் !
கவிஞன்!
- சங்கீதா
No comments:
Post a Comment