கடவுள் இங்கே பல
மருத்துவர் குலத்திற்கு இன்று வாழ்த்துகளாம்
மண்ணில் தாய் போல் இவரும் கடவுளராம்
வருத்தும் நோய்களுக்கு வரமாம் "வைத்தியநாதன்" (பொது மருத்துவம்)
வலிக்கும் பற்களா ? வாருங்கள் "பல்லவன்" (பல் மருத்துவம்)
கருவிலிருந்து "குழந்தைசாமி" கண்காணிப்பார் (குழந்தை நலம்)
கறாராய் ஆணா? பெண்ணா? அதைக் *கூறார்
திருமணமானோர் அணுக "கல்யாண சுந்தரம்" (பாலியல்)
திடீரென இதயம் நின்றால் இருதயராஜும் (இதயம்)
குருதியில் சர்க்கரையது கூடினால் "சக்கரபாணி" (நீரிழிவு)
கூந்தல் அது நாலடியாய் குறைந்தால் "நீலவேணி" (சிகை)
இரகசியம் மனைவி சொல்ல கேட்காமல் போச்சா
இருக்கவே இருக்கிறார் நம் "காதர் பாட்சா" (காது, மூக்கு, தொண்டை)
அறுக்க உடலை ஆயிரங்கள் வாங்கும் "ரம்பா" (அறுவை சிகிச்சை)
அசடு மனசுக்கு ஆறுதல் சொல "மனோபாலா" (மன நலம்)
இருமுறை மாங்கனி தரும் "செல்வன்" உண்டாம்
இப்படியும் ஒரு மருத்துவர் நம்ப முடியாதாம் .
வாழ்த்துகள் 💐💐💐
*கூறார்--கூற மாட்டார்
__. குத்தனூர் சேஷுதாஸ் 1/7/2025
No comments:
Post a Comment