--------------------
பொதுக் குழு விவரணம்
--------------------
14-4-2025, திங்கள் மாலை ஆறு மணிக்கு பன்பயன்பாட்டு பெருவரங்கில் நம் மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் பொதுக் குழு சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
நிர்வாகக் குழு உறுப்பானர்கள் விஜயலக்ஷ்மி பாலாஜி மற்றும் துர்கா சாய்ராம் இருவரோடு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்திசைத்த தமிழ்ப் பண்ணோடு நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
இ.ச. மோகன் ஐயா,
செங்கதிர்ச் செல்வன் ஐயா,
திருமதி. விஜயலக்ஷ்மி பாலாஜி, சாரங்கராஜன் ஐயா, திருமதி. மைதிலி மதி ஆகியோர்
குத்து விளக்கேற்றினர்.
நிர்வாகச் செயலர் சி. ஹரீஷ் வரவேற்புரை நல்கினார்.
தன் தலைமையுரையில் *குறுநகைத் தமிழ்* புலனக் குழுவாய் துவக்கப் பட்டு 14-4-23 அன்று அறிமுகக் கூட்டத்துடன் துவங்கி மகாகவி பாரதி தமிழ்ச் சங்கமாய் மலர்ந்து ஈராண்டுகளாய் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நம் சங்க செயல்பாடுகளை தலைவர் ஸ்ரீவி விளக்கினார். வெற்றிக்கு அடிகோலிய நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி பாராட்டினார்.
பின், நிதி நிலை அறிக்கையை நிதிச் செயலர் சாய்ராம் வாசித்தளித்தார். நிதி நிலைமை சீராக இருப்பதற்கு உதவுகின்ற உறுப்பினர்களின் பங்களிப்பிற்கு நன்றி கூறினார். நடப்பு நிதியாண்டிற்கு இதுவரை 83 பேர் சந்தா அளித்ததைக் குறிப்பிட்டு, மீதமுள்ளோரும் உடனே சந்தா செலுத்திட கோரிக்கை விடுத்தார்.
அவரைத் தொடர்ந்து தியாகராஜன் (உதவித் தலைவர், மலர்விழி (செயலர்) அனிதா பாரதி (உதவிச் செயலர்) மற்றும் ஹரீஷ் (நிர்வாகச் செயலர்) ஆகியோர் தமிழ்ச் சங்கத்தோடு பயணித்தது குறித்து பேசினர்.
பிறகு, உறுப்பினர் நேரம் துவங்கியது.
காமாட்சி நாகராஜன், மைதிலி மதி, ஸ்ரீநிவாசன், ராஜேஸ்வரி,
வித்யா சிவக்குமார், சாரங்கராஜன்,
தேவி அருண்
ஆகியோர் நிறைகுறைகளைப் பற்றியும், ஆலோசனைகள் வழங்கியும் தத்தம் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
அவர்களது கருத்துகளைத் தொகுத்து சாய்ராம் அவர்களும் ஸ்ரீவி அவர்களும் விளக்கம் அளித்தனர்.
விவாதங்களின் அடிப்படையில்,
★ மகளிரின் பங்களிப்பை அதிகமாக்கும் நோக்குடன் ஒரு உதவிச் செயலர் பதவிக்குப் பதிலாக இரு பதவிகளை உருவாக்கி மகளிருக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் நமது அமைப்பு விதிகளில் தகுந்த மாற்றம் செய்வது என்றும் தீர்மானம் முன் மொழியப் பட்டு ஒரு மனதாக பொதுக் குழுவால் ஏற்கப் பட்டது. மொத்த நிர்வாகப் பதவிகள் 7 ஆகின்றன.
★ உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சங்கத்தின் விரிவாக்கத்தினைக் கணக்கில் கொண்டும் பூர்வாக்கு வெளியில் உள்ளோரையும் உறுப்பினராக்க முயற்சிக்கலாம். இதனை நிர்வாகக் குழு ஆலோசித்து வரைமுறைகளைத் திட்டமிடலாம் என்ற கருத்து ஏற்கப் பட்டது.
★ நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப் பட்ட பின் அவை அதனை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது.
மேலும் நம் சங்கத்தின் இருப்பில் இருக்கும் நூல்களின் விவரங்கள் படிக்கப் பட்டன அவையோரின் கவனத்துக்காக.
பிறகு நிர்வாகிகள் தேர்தல் துவங்கியது. நிர்வாகிகள் மேடையிலிருந்து கீழிறங்க, தேர்தல் குழு உறுப்பினர்கள்
இ.ச. மோகன், செங்கதிர்ச் செல்வன், விஜயலக்ஷ்மி பாலாஜி ஆகியோர் மேடையேறினர்.
தேர்தல் நடவடிக்களைப் பதிவு செய்ய மலர்விழி உதவினார்கள்.
முதலில் தேர்தல் குழுவின் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கையின் சாராம்சத்தை விளக்கினார்கள். அவையாவன:
தேர்தல் நடத்தப்படும்
நிர்வாகப் பதவிகள்:
நமது அமைப்பு விதிகளின் படி ஏழு பதவிகள் அவையாவன:
1) தலைவர்
2) உதவித் தலைவர்
3) செயலர்
4) உதவிச் செயலர் - இரு பதவிகள்
5) நிர்வாகச் செயலர்
6) நிதிச் செயலர்
பதவிக் காலம் : ஈராண்டுகள்
பதவிகளுக்கான தேர்தல் ஒவ்வொரு பதவிக்காக ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப் படும். தேர்தலில் ஒரு பதவிக்கு தன் பெயரை தானே முன் மொழிந்து கொள்ளலாம்.
பிறிதொருவரின் பெயரையும் முன் மொழியலாம்.
முன் மொழிதலுக்கான ஒரு வழிமொழிதல் (பிறிதொறு உறுப்பினரால்)அவசியம்.
புதிதாக போட்டியிட விழைவோர் குறைந்த பட்சம் கடந்த ஆறு மாதங்களாவது உறுப்பினராக இருந்திடல் வேண்டும்.
தங்களைப்பற்றியும் , சங்கத்தில் இதுவரை தாங்கள் அளித்த பங்களிப்புகள்- இயல், இசை, நாடகம், கவிதை , தினப்பதிவுகள்பற்றியவை, சங்கம்மேலும் வளர
வைத்திருக்கும் திட்டங்கள் என்று 3-5 நிமிடங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப் படும்.
ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டோர் களத்தில் இருந்தால், விலகிக் கொள்ளுதல் இல்லாதிருந்தால் தேர்தல் குழு தேர்தல் நடத்தும்.
உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும். (குடும்பத்திற்கு ஓர் ஓட்டு)
கையுயர்த்துதல் மூலமாக தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கப்படும்
நிர்வாகக் குழு உறுப்பினர்களை புதிய நிர்வாகிகள் நியமிப்பார்கள்.
நிர்வாக குழு உறுப்பினர் எண்ணிக்கையையும் நிர்வாகக் குழு தீர்மானிக்கும்.
3 கூட்டங்களுக்குத் தொடர்ந்து வராதோர் நிர்வாகக் குழுவிலிருந்து நீக்கப் படுவார்கள்.
நடப்பு நிதியாண்டிற்கான (2025-26) ஆண்டுச் சந்தா ௹.1200/- செலுத்தியிருக்க வேண்டும். இணையதள வங்கிச் சேவை இன்னும் கிடைக்கப் பெறாததால், தேர்தல் குழு கேட்கையில் சந்தா அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட் காண்பித்தல் வேண்டும்.
தேர்தல் குழு ,
இத்தேர்தல் பற்றி எடுக்கும் எல்லா முடிவுகளும் இறுதியானவை.
போட்டியிட விழைவோர் நேரிடையாக அல்லது கைபேசி மூலமாக தேர்தல் குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்கலாம். அல்லது பொதுக் குழுவில் வந்து தெரிவிக்கலாம்.
தங்களிடம் நேரிடையாக இதுவரை எவரும் விழைவு தெரிவிக்கவில்லை என்பதால் தற்போது தெரிவிக்கலாம் என்ற அறிவிப்போடு ஒவ்வொரு பதவிக்காக தேர்தலை நடத்தினர்.
பல முன்மொழிதல்கள், விலகுதல்கள் நடந்த பின்னர் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
ஆரோக்கியமான முறையில் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்த மகளிரின் ஆர்வம் குறிப்பிடத் தக்கது. இவை சங்கத்தின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்பதற்கான நல்ல அறிகுறிகள்.
தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகாகள் விவரம்:
தலைவர் : ஜெ. ஸ்ரீவெங்கடேஷ்
உதவித் தலைவர்: கோ. தியாகராஜன்
செயலர் : மலர்விழி லக்ஷ்மன்,
உதவிச் செயலர்கள்: ஈமான் சுல்தானா,
ந. ராஜேஸ்வரி
நிர்வாகச் செயலர்: சிவகாமி சீதாராமன்
நிதிச் செயலர் : சு. சாய்ராம்.
புதிய நிர்வாகிகளை தேர்தல் குழு மேடைக்கழைத்து அறிமுகப் படுத்தியது.
நமது அமைப்பு விதிகளின் படி நிர்வாகக் குழு உறுப்பினர்களை புதிய நிர்வாகிகள் நியமிப்பார்கள் என்ற தகவலை தேர்தல் குழு அறிவித்தது.
நிறைவு நிரலாக, நமது சங்கத்துக்கான வலைப் பதிவு தளத்தை உருவாக்கி நிர்வகிக்கும் அமுதவல்லி அதனை திரையில் ஒளிர விட்டு அறிமுகப் படுத்தினார். உறுப்பினர்களின் வினாக்களுக்கு விளக்கம் அளித்தார்.
பின், உதவிச் செயலர் ராஜேஸ்வரி நன்றி நவின்றார்.
நிகழ்ச்சியை ஆர். மகாலக்ஷ்மி சிறப்பாக தொகுத்தளித்தார்.
தேசியப் பண்ணோடு பொதுக் குழு நிறைவுற்றது.
நன்றி நவிலல்🙏
*பொதுக் குழு சிறப்புற நடந்திட கரத்தாலும் கருத்தாலும் உதவிய தமிழ் உறவுகள்*
*பெருந் திரளாகக் கலந்து கொண்டதோடு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தும் ஜனநாயகக் கடமையை சிறப்புற ஆற்றியும் பங்களித்த உறுப்பினர்கள்*
*சீரிய முறையில் தேர்தலை நடத்தித் தந்த தேர்தல் குழுவினர்*
*வலைப் பதிவு தளம் உருவாக்கி நம் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அதனை அறிமுகப் படுத்திய அமுதவல்லி*
அனைவருக்கும் நெஞ்சுநிறை நன்றிகளை நம் சங்கம் உரித்தாக்குகிறது.
நன்றி🙏
ஸ்ரீவி
தலைவர்
நிர்வாகக் குழுவிற்காக.
No comments:
Post a Comment