●०●०●०●०●०●०●०●०●०●०●०
*பலூன் மாமா வந்தாலே*
*பரவசந்தான் பெருகிடுமே!*
●०●०●०●०●०●०●०●०●०●०●०
திருவிழாக் காலங்களிலே
தெருவெங்கும் தோரணங்கள்
இரவைப் பகலாக்கும்
வண்ணமிகு மின்விளக்குகள்
பாலகர்கள் பரவசங் கொள்ள
பற்பலவாய் காரணங்கள்
பலூன் மாமா வந்திட்டால்
விண்ணைத் தொடும் பரவசங்கள்
கலர் கலராய் பலூன் பறக்கும்
சிறார்களின் கண்கள் சிறகடிக்கும்
கைகளில் பலூன் கிடைத்திட்டால்
இன்ப வெள்ளத்தில் மூழ்கடிக்கும்
எளிமையான குழந்தை மனமோ
கொள்ளை மகிழ்வில் குதித்தாடும்
இனிமையான அந்த நாட்கள்
திரும்பி வர மனம் தவிக்கும்!
பலூன் போன்ற இளமைக் காலம்
பறந்து போகும் விரைவினிலே
காற்றிறங்கிய பலூன் போல
ஆகி விடுமே மனிதரின் வாழ்வே!
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
-------------------
பலூன் மாமா
-------
இந்த ஊதும்பை அல்லது வளிக்கூண்டு
எளியவர்க்கும் மகிழ்வூட்டும் பொழுதுபோக்கு சாதனம்.
அது மட்டுமா?
இது மருத்துவர்க்கு
இருதய அடைப்பை
நீக்க உதவும் உயிர்காப்பான்.
அக்காலத்தில் இதை விற்பவர் மாமா என்று அறியப்படுவார்
இக்காலத்தில் 'அங்கிள்' அல்லது 'அண்ணா'.
இவர் இப்போதெல்லாம
காற்றழுத்த விசைக்குழாயை பயன்படுத்துகிறார்
மாசுக்காற்று நிறைந்த இவ்வுலகில் வேறென்ன செய்ய?!
இன்று பிறந்த நாள் விழாக்களில்
இப்பையை ஊதி உடைப்பதோ அல்லது
மெழுகுவர்த்திகளை ஏற்றி அணைப்பதோ
கொண்டாட்டத்தின்
வெளிப்பாடுகள்.
இதன் வாழ்வு சுருக்கமானது எனினும்ஒரு தத்துவத்தை இனைவூட்டுகிறது:
"காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த
பையடா "என்ற சித்தர்
வாக்கை!
பெயர்கள வேறுபட்டாலும்
இவர் விற்கும் பொருளுக்குக் காலம்
தாண்டிய மதிப்பு உண்டு.
-மோகன்
------------------------------
உரு தெரியாமல் எங்கோ சுருங்கி
யார் கண்களுக்கும்
புலப்படாமல் இருக்கும் பலூன் போன்றவர்கள் சிலர்! இவர்களின் காதுகளுக்குள் நம் வாயையே பலூனாக்கி
நம்பிக்கை என்னும் காற்றை நேர்மறையாய் ஊதினால் பலரும் பார்த்துப் பரவசப்படும் பலூனைப் போல் உயரப் பறப்பர்!
எதிர்மறை ஊசியால்
பயம் காட்டிக் குத்தினால் இருக்கும் தன்னம்பிக்கையும் இழந்து ஒடுங்கி ஒன்றுமில்லாமல் போவர்!
உங்கள் வாய் பலூனா
ஊசியா?
- சாய்கழல் சங்கீதா
-------------------------
No comments:
Post a Comment