மேகமாய் வாழ்க்கை.......
மரங்கள்தான் தர வேண்டுமென்பதில்லை. சில சமயங்களில் மேகமும் தருவதுண்டு.... நிழல்
மிதமாய் மிதந்து செல்லும்.
வெண்மையானால் நிழல். சிறிது கருத்தால் மழை.
மலைகளில் படரும் வெண்மேகம் தரும் நிழல் கருமையாய்.....
மேகமில்லா வெறுமை வெயிலாய் வெண்மையாய்
வெண்மேகம் நகரும்..... நிழலின் கருமை. குதூகலிக்கும் மனம், கருமையாகி மழை பொழிந்தால் நிழல் தேடி ஓடும்.
முரண்பாடுகள் முட்டி நிற்கும்.
மழையும் நிழலும் மாறி மாறி...
மேகம் ஒன்றே
முரண்பாடுகளே முறையான வாழ்க்கையாகியதால்.....
நிறத்தினை அறிந்து நிழலைத் தேடு.
நிம்மதியான நித்திரை நிதர்சனமாகும்......
- அகல்யா
No comments:
Post a Comment