ஆகஸ்ட் 10 :
உலக சிங்கங்கள் தினம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வனத்தின் அரசன் அரிமா
கம்பீரம் என்றாலே அரிமா
கர்ஜனை செய்யும் அரிமா
பேரொலி அது போல் வருமா
கணீர் குரலில் பேசுவோரை
சிம்மக் குரலோன் என்பார்கள்
கம்பீரமாக நடப்போரை
சிங்க நடை என்பார்கள்.
வனத்தின் அரசனைக் கொண்டாடும்
தினமே இன்றைய நன்னாளாம்.
சிறுவர் கதைகளில் நடமாடும்
சிங்கத்தை நாமும் கொண்டாடுவோம்!
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
No comments:
Post a Comment