*அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!*
நமது தமிழ்ச்சங்கம் வந்த பாதையை சற்று திரும்பிப் பார்ப்போம்!
★ 23 மார்ச் 2023 அன்று இப்புலனக் குழு *"குறுநகைத் தமிழ்"* என்ற பெயரோடு துவங்கப்பட்டது. இதுவே நாம் எடுத்து வைத்த முதல் அடி.
★ சென்ற வருடம் இதே நாளில், 14~4~23 அன்று கார்ட்ஸ் அறையில் முதல் *அறிமுகக் கூட்டம்* நடந்தது. 26 அன்பர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
★ அதன் பின் இரு *பொதுக் குழுக்கூட்டங்கள்* நடந்தன. நமது சங்கத்திற்கு *"பூர்வா~பாரதி தமிழ்ச் சங்கம்"* எனப் பெயரிடப் பட்டது. துவக்க விழா 16~7~23 நடத்துவதாக முடிவெடுக்கப் பட்டது.
★ *16~7~23* அன்று பன்பயன்பாட்டுப் பெருவறையில் கோலாகலமான *துவக்க விழா*.
சிறப்பு விருந்தினர்கள்:
◆ பத்ரி (இயக்குநர்)
◆ உமாபாரதி (கவிதாயினி)
◆ காதல்மதி (பாடலாசிரியர்)
■ ஆறு குழந்தைகள் பாரதி பாடல்களை திருமதி விஜயலக்ஷ்மி (பாடல்நிகழ்ச்சிப் பொறுப்பாளர்) மேற்பார்வையில் சிறப்பாகப் பாடினர்.
■ ஏழு குழந்தைகள் பாரதிப் பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஸ்ரீநிதி மேற்பார்வையில் நடனம் ஆடினர்
■ பாரதி அறநெறி போதித்த தமிழ்க்கவியே - தேசியக் கவியே என்ற தலைப்பில் ஸ்ரீவெங்கடேஷ் நடுவராக இருந்த பட்டிமன்றம் நடைபெற்றது.
★ *27~8~23 அன்று சிறார்களுக்கான பாரம்பரிய விளையாட்டு விழா* நடைபெற்றது.
பொறுப்பாளர்கள்
லாவண்யா, மலர்விழி, அனிதா பாரதி.
அறுபது குழந்தைகள் கலந்து கொண்டனர்.
★ *21~12~23 அன்று "8-லிருந்து 80 வரை" மெல்லிசை நிகழ்ச்சி* திரு. சாய்ராம் மற்றும் திருமதி. விஜயலக்ஷ்மி பயிற்சியில் 13 பாடகர்கள் இன்னிசைத்தனர்.
★ சிறப்பு விருந்தினர்கள்
● அபஸ்வரம் ராம்ஜி (மெல்லிசை ஜாம்பவான்)
● மஞ்சு சௌத்ரி (குரல் விற்பன்னர்)
● நித்யா (திரை நட்சத்திரம்)
*21~1~24 : பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்.*
சிறப்பு விருந்தினர்: கலைமாமணி. சந்திர மோகன்.
◆ மயக்கும் வீணை இசை ~ திருமதி கிரிஜா ஞானேஸ்வரன்
◆ மாறிவரும் சமூக சூழலில் சிறந்தது தனிக் குடித்தனமா இல்லை கூட்டுக் குடித்தனமா பட்டிமன்றம் - நடுவராக ஸ்ரீவி
◆ ஐவர் பங்கேற்ற பொங்கல் பற்றிய கவியரங்கம்
★ *30~3~24 "மகளிர் மட்டும்" மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்*
பொறுப்பாளர்: துர்கா சாய்ராம்.
40 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள்
எழுவர் பங்கேற்ற கவியரங்கம்.
◆ சிறப்பு விருந்தினர் : மைதிலி இராமையா (எழுத்தாளர், பயிற்சியாளர்)
இந்த 5 பெரிய கலைநிகழ்ச்சிகள் தவிர ஏழு நிர்வாகக் குழுக் கூட்டங்களும், மூன்று பொதுக் குழுக் கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. அவற்றில்
லக்ஷ்மி நாராயணன், மகாலக்ஷ்மி ஆகியோர் *நூல் அறிமுகம்* செய்துள்ளனர்
ஹரீஷ் 'பரிமேலழகர் உரை' பற்றிய *இலக்கிய உரை* ஆற்றினார்.
சிறுவன் பிரத்திவ் *பொ. செல்வன் கதை-திரைப்பட ஒப்பீடு உரை* நிகழ்த்தினான்.
இத்துனை செயல்பாடுகளுக்கும் நமது நன்கொடையாளர்களின், புரவலர்களின், சந்தாதாரர்களின் பேராதரவே அடித்தளமிட்டது.
ஆண்டு விழாவை நோக்கிப் பயணிப்போம்.
துவக்க விழா முடிந்து 9 மாதங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் பட்டியல் மேலும் நீளட்டும் வருங்காலங்களில். இதுவரை 52 உறுப்பினர்கள் மேடையேறி தத்தமது திறமைகளை பறை சாற்றியுள்ளனர். நமது சங்க மேடை நமக்கானது என உறுதிப் படுத்தியுள்ளனர்.
தொடர்வோம் நம் பயணத்தை.
கரங்கள் கோத்துப் பயணிப்போம் தமிழன்னையின் தாள் பணிந்து.
மகாகவி துணை நிற்பான்
வாழிய நற்றமிழ்
நற்றுணையாவது நம் தமிழே