பூர்வா
விண்டர்மியர்
பவானி அம்மன் கோவில் தெரு ,
பள்ளிக்கரணை ,
சென்னை , 600100
அமைப்பு
விதிகள்
மகாகவி பாரதி
தமிழ்ச் சங்கம்
அமைப்பு
விதிகள்
பெயர்:
பூர்வா
விண்டர்மியர் குடியிருப்பில், அக்குடியிருப்பு வாசிகளால்
உருவாக்கப் பட்ட இந்த அமைப்பு 'பூர்வா -
பாரதி
தமிழ்ச்சங்கம்' என பெயரிடப் படுகிறது.
இலச்சினை: (LOGO)
இத் தமிழ்ச்சங்கத்தின் முழக்கமாக 'நற்றுணையாவது நம் தமிழே'
எனும்
வாக்கியத்துடன் கீழ்க்கண்ட இலச்சினை சங்க இலச்சினை ஆக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
நோக்கம்:
௧] பூர்வா குடியிருப்பில் தமிழ்ப் பணி புரிதல்,
௨] குடியிருப்பில் தமிழில் உரையாட, உறவாட ஊக்குவித்தல்,
௩] குடியிருப்பில் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு, திறமைசாலிகளுக்கு
ஊக்கமளித்து மேடை கொடுத்தல்.
௪] தமிழ் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை பொதுவாக அனைவரிடமும் குறிப்பாக இளைய தலைமுறையிடமும் குழந்தைகளிடமும் ஏற்படுத்துதல்
௫] உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, போட்டிகளை, குடியிருப்பில் இயன்றளவு அவ்வப்போது நடத்துதல்.
௬] குடியிருப்பிலும், வெளியிலும் இயன்றளவு சமூகப் பணி ஆற்றுதல்.
௭] தமிழ் இலக்கியச் சேவைகளை ஊக்குவித்தல். தமிழ்ப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்தல்.
௮] குடியிருப்பிலும் பிறவிடங்களிலும் இயற்கையைப் பேணுதல், சுற்றுச் சூழல் பாதுகாத்தல், இந்திய நாட்டின் பேராண்மையை அரசியல் அமைப்புச் சட்டத்தை மதித்து நடத்தல்
०] சங்க செயல்பாட்டுக்கு உதவிகரமாக 'நிர்வாகக் குழு' அமைத்தல்.
௧०] திட்டமிடவும் அமல்படுத்தவும் அவ்வப்போது நிர்வாகக் குழு கூட்டங்களையும் இடையிடையே உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பொதுக் குழுக் கூட்டங்களையும் நடத்துதல்.
௧௨] நிர்வாகக் குழுவில் எடுக்கப் படும் முடிவுகளை அமல்படுத்துதல்.
௧௩] பொதுக்குழு எடுக்கும் முடிவுகள் இறுதியானது.
உறுப்பினர் சேர்க்கை:
பூர்வா விண்டர்மியர், பள்ளிக்கரணை, சென்னை 600100 குடியிருப்புவாசிகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்திட முடியும்.
வேறு எவரும் உறுப்பினராக இருந்திட இயலாது. இக்குடியிருப்பிலிருந்து குடிபெயரும் போது உறுப்பினர் தகுதி தானாக நீங்கிடும்.
சந்தா:
ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு ௹.100 (ஒரு நூறு மட்டும்). ஒவ்வொரு மாதமும் பிரதி 5-ம் தேதிக்கு முன் சந்தா செலுத்த வேண்டும். மூன்று மாதங்கள் சந்தா தராதோர் உறுப்பினர் தகுதி இழப்பார்கள்.
வளர்ச்சி நிதி/நன்கொடை:
தேவைப் படும் சமயங்களில் நிர்வாகக் குழு/பொதுக்குழு நிர்ணயிக்கும் வளர்ச்சி நிதி/நன்கொடை பெறுதல்.
இதுதவிர நிகழ்ச்சிகளுக்கு புரவலர்கள் (தனிநபர்கள் / வணிகவியல் குழுமங்கள் / வணிகர்கள் / வணிக நிறுவனங்கள்) எவரேனும் வரும் சமயங்களில் அவர்களைப் பயன்படுத்துதல்.
நிர்வாகக் குழு:
சங்க செயல்பாட்டிற்கு உதவிகரமாக ஒரு நிர்வாகக் குழுவினை பொதுக் குழுவின் ஒப்புதல் படி கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.
தலைவர் : சங்கத்தை வழிநடத்துதல், கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல், கடிதத் தொடர்பு (Correspondence), நிதிச் செயலருடன் இணைந்து நிதி நிலைமைக்குப் பொறுப்பேற்றல், நிதிச் செயலரோடு ஓர் இணை-வங்கிக் கணக்கு துவங்குதல்.
உதவித் தலைவர்: தலைவர் பணிகளில் உதவுதல், தலைவர் இல்லாத கூட்டங்களில் தலைவராகப் பணியாற்றுதல், பிற பணிகளில் பொறுப்பேற்றல்
செயலர் : சங்க செயல்பாட்டில் முன் நிற்பது, நிகழ்ச்சிகள் அமைத்தலில் களப்பணி ஆற்றுவது, கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் நிர்வாகக் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது. பிற பொதுவான சங்க செயல்பாடுகளில் பங்காற்றுவது.
உதவிச் செயலர்: செயலருடன் இணைந்து பணியாற்றுதல்.
நிர்வாகச் செயலர்: கூட்டங்கள்/நிகழ்ச்சிகள் நடத்துவதில் பொறுப்பு ஏற்பது, நிகழ்ச்சிகளை நடத்த அமைக்கப் படும் குழுக்களுக்கு பொறுப்பாளராக இருப்பது, பிற பொதுவான சங்க செயல்பாடுகளில் பங்காற்றுவது.
நிதிச் செயலர்:
சந்தா வசூல் செய்வது, சந்தா ரசீது வழங்குவது, கூட்டங்களில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பது, உறுப்பினர்கள் பார்வைக்காக கூட்டங்களில் கோப்புகளை/ஆவணங்களை சமர்ப்பிப்பது, தலைவருடன் இணைந்து நிதிநிலை அறிக்கைக்கு பொறுப்பேற்பது, தலைவரோடு ஓர் இணை-வங்கிக் கணக்கு துவங்குவது.
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
சங்கச் செயல்பாட்டிற்கு உறுதுணையாக பணியாற்றும் தன்னார்வல உறுப்பினர் எவரும் நிர்வாகக் குழு உறுப்பினராக பதவி வகிக்கலாம்.இந்த முடிவை நிர்வாகக் குழு எடுக்கும்.நிர்வாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு எதுவும் இல்லை.
கூட்ட அறிவிக்கை அறிவிப்பு:
பொதுவாக நிர்வாகக் குழு / பொதுக் குழு கூட்டங்களுக்கு ஐந்து நாட்கள் முன் அறிவிப்பு வெளியிட வேண்டும். தேவைப் படும் காலங்களில் அவசரக் கூட்டங்களுக்கு இரண்டு நாட்களில் அறிவிப்புக் கொடுக்கலாம்.
கூட்ட வருகை நிர்ணயம் (Quorum):
கூட்டம் நடத்த மொத்த எண்ணிக்கையில் 50% தேவை. உறுப்பினர் வருகை குறைவாக இருக்கையில் கூட்டத்தைத் தள்ளி வைத்து, பத்து நிமிடங்கள் கழித்து இருக்கும் உறுப்பினருடன் கூட்டங்களை நடத்தலாம்.
அமைப்பு விதி:
இந்த அமைப்பு விதிகளில் தேவைப் படுங்கால், மாற்றங்களை பொதுவாக பொதுக் குழு நிறைவேற்றும். கால அவகாசம் கருதி, நிர்வாகக் குழுவே மாற்றங்கள் இயற்றலாம். பின்னர் பொதுக் குழுவில் அதற்கு ஒப்புதல் பெற்றிட வேண்டும்
திருத்தங்கள்:
1. 22.7.24 அன்று சி3-405-ல் நடந்த நிர்வாகக் குழு கூடுகையில் பூர்வா பாரதி தமிழ்ச்சங்கம் எனும் இந்த சங்கத்தின் பெயர் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் என மாற்றப் படுவதாக ஒரு மனதாக தீர்மானிக்கப் பட்டதன் அடிப்படையில் இந்த சங்கத்தின் பெயர் அவ்வாறாகவே மாற்றப் படுகிறது. இனி இந்தப் பெயரிலேதான் சங்கம் இயங்கும்.
1A) லோகா: பெயர் மாற்றத்திற்குப் பின் சங்கத்தின் லோகோ:
2. மேலும், சங்க நிதியாதாரத்தை நிர்வகிக்க "மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம்" எனும் பெயரில் ஓர் இணைந்த வங்கிக் கணக்கினை மூன்று நிர்வாகிகள் மூலம் துவக்குவது எனவும் முடிவெடுக்கப் பட்டது.
3. 8-9-24 அன்று கார்ட்ஸ் அறையில் நடந்த நிர்வாக்குழு கூடுகையில் நம் சங்கத்திற்கான வங்கிக் கணக்கைக் கையாள வேண்டிய தலைவர் மற்றும் நிதிச் செயலரோடு வேறு எந்த நிர்வாகி வங்கிக் கணக்கு துவங்கிட கையெழுத்திட வேண்டும் என்பதையும் நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கும் என்ற ஒரு மனதான தீர்மானத்தின் அடிப்படையில் அந்த முடிவு இறுதி செய்யப் படுகிறது.
4. நடப்பு நிதி ஆண்டிற்கான வங்கிக் கணக்கினை தலைவர் மற்றும் நிதிச் செயலரோடு உதவித் தலைவர் மூன்றாவது நிர்வாகியாக இருந்து துவக்கி நிர்வகிக்க உதவிடுவார்.